விமல் வீரவங்சவை சிறைச்சாலையிலிருந்து அங்கும் இங்கும் அழைத்துச் செல்வது குறித்து எனக்கு பாரிய அச்சமாக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவருடன் இன்னும் ஒருவரை அழைத்துச் சென்றால், அவருக்கு படும் துப்பாக்கிச் சூடு இவர் மீதும் படாதிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அவர் வினா எழுப்பினார்.
நாட்டில் பொது மக்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினையுள்ளது. வெளியில் இறங்கி நடந்து செல்வது பயமாகவுள்ளது. நிம்மதியாக தூங்க முடியாமல் உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. சாட்சிகள் தெரிவிக்கும் சகல கருத்துக்களும் ஊடகங்களில் வெளிவருகின்றனர்.
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளே செல்வதும், வெளியில் வருவதும் மாத்திரமே ஊடகங்களில் காட்டப்படுகின்றன. அவர் என்ன பேசுகின்றார் என்பது மர்மமாகவே உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.