சீனாவின் உயர் மட்ட பாதுகாப்பு குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரத்தில் இந்த குழு இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அம்பாந்தொட்டையில் முன்னெடுக்கப்படுகின்ற சீனாவின் சிறப்பு வர்த்தக வலயம், அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் மற்றும் கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக நகர் திட்டம் என்பவற்றை கண்காணித்தல் இந்த குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
சீனா அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் பல்வேறு சர்ச்சைகளை உள்ளக அரசியல் சூழலில் எதிர் கொண்ட நிலையில் ஆரம்பத்தில் துறைமுக நகர் என அழைக்கப்பட்ட தற்போதைய நிதி நகரத்தின் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அம்பாந்தோட்டையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் பல்வேறு துறையைசார்ந்த உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு பல சந்தர்ப்பங்களில் விஜயம் செய்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர்.
தற்போது இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை சார்ந்த சீன குழு பல்வேறு சந்திப்புகளில் கலந்துக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த வாரத்தில் இறுதியில் இலங்கைக்கு வரவுள்ள சீன குழுவானது அந்நாட்டு பாதுகாப்பு துறையை சார்ந்த குழு என இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.