இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் பாகுபலி 2 படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. பாகுபலி ட்ரைலரை பார்த்த அனைவரும் முதல் பாக வசூலை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் ஹிந்தி ட்ரைலரை மும்பையில் கரண்ஜோஹர் தலைமையில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை பற்றி நிருபர்கள் பல கேள்விகள் கேட்க தொடங்கினார். இதில் குறிப்பாக பாகுபாலி 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு?, முதல் பாகத்தில் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்று கேள்வி எழுந்தது.
அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர்கள், இரண்டு பாகத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 450 கோடி செலவிட்டுள்ளோம். முதல் பாக வெற்றியில் எதையுமே சம்பாதிக்கவில்லை. அதற்கும் சேர்த்து இந்த படம் சம்பாதித்து தரும் என்று நம்புகிறோம் என கூறினார்.