Loading...
ஒருவன் தன் மனைவியின் மீதுள்ள அலாதியான காதலால், அவளின் சந்தோஷத்திற்காகவும், விருப்பத்திற்காகவும், தன் தோலை உரித்து பயங்கரமாகவும், அசிங்கமான தோற்றத்திலும் மாறியதால், பல விளைவுகளை சந்தித்துள்ளான்.
உறவுகளுக்குள் அன்பு மிகவும் முக்கியம் தான். காதலுக்காக ஒருவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதற்காக ஒருவர் தனக்கான அடையாளத்தை மட்டும் அழிக்கக்கூடாது. ஆனால் ஒருவன் தன் மனைவியின் மீதுள்ள அலாதியான காதலால், அவளின் சந்தோஷத்திற்காகவும், விருப்பத்திற்காகவும், தன் தோலை உரித்து பயங்கரமாகவும், அசிங்கமான தோற்றத்திலும் மாறியதால், பல விளைவுகளை சந்தித்துள்ளான். இக்கட்டுரையில் மனைவிக்காக தன் தோலை உரித்து அசிங்கமாக மாறிய ஆணின் கதை மற்றும் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
தோலை உரிக்க சொன்ன மனைவி…
ஒரு ஆண் தன் மனைவியின் மீது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான அன்பு வைத்துள்ளான் என்பதை, இப்போது சொல்லப்போகும் கதையில் அறிவீர்கள். அதுவும் தன் மனைவியின் விருப்பம் நடக்காத ஒன்று என்று கூட யோசிக்காமல், அவள் கூறியதற்காக, சற்றும் யோசிக்காமல், அவளது சந்தோஷத்திற்காக மட்டும் தன் உடலில் உள்ள தோலை உரித்துள்ளான்.
தோல் தான் முக்கிய பகுதி…
ஒவ்வொருவருக்கும் தோல் மிகவும் இன்றியமையாத ஒன்று. அந்த தோலை நீக்கிவிட்டால், வெறும் தசைப்பகுதி தான் இருக்கும். சாதாரணமாக அடிப்பட்டு தசை வெளியே தெரிய ஆரம்பித்தாலே, அவ்விடம் பயங்கர எரிச்சலுடன் இருக்கும். அப்படியெனில் இந்த ஆணுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
மனைவியின் சந்தோஷத்திற்காக…
மனைவியின் விருப்பத்தை ஏற்று தோலை உரித்த பின், அந்த ஆணின் வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருந்தது எனலாம். தோலை உரித்து விட்டதால், அவன் எதை தொட்டாலும், அதில் இரத்தக்கறை படியும்.
இந்த தோற்றத்தையே அவளும் விரும்பினால்…
இந்த தோற்றத்தை இவனது மனைவி விரும்பினாலும், இவனது இந்த முட்டாள்தனமான செயலுக்குப் பின் அவனது வாழ்க்கையே மாறிவிட்டது. இருப்பினும் அவனது காதல் வாழ்வில் மட்டும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
மன இறுக்கம் சூழ்ந்தது
தன் மனைவிக்காக தோலை உரித்துக் கொண்டாலும், அலுவலகத்திற்கு சென்றால், அவனது வாடிக்கையாளர்கள் அவனுடன் பேச மறுப்பதோடு, பல ஒப்பந்தங்களும் அவனை விட்டு போனதால், மன இறுக்கத்திற்கு உள்ளாக ஆரம்பித்து, பின் அந்த தம்பதியர்களின் வாழ்க்கை மெதுவாக பாதிக்க தொடங்கியது.
தனிமையை உணர்ந்தான்…
மனைவிக்காக செய்து கொண்டாலும் தோலை உரித்துக் கொண்டாலும், வீட்டிற்கு வரும் நண்பர்களும், குடும்பத்தினரும், தோல் இல்லாமல் சுற்றும் இவனருகில் இருப்பதை மிகவும் அசௌகரியமாக உணர்ந்தனர். இதனால் அவன் தனிமையை உணர ஆரம்பித்தான். மேலும் பலரும் இவனை சந்திக்க விரும்பாமல் தவிர்க்க ஆரம்பித்தனர்.
முடிவு
தனிமை இவனை அதிகம் வாட்டியதால், மன இறுக்கத்திற்கு உள்ளாகி, ஒரு நாள் இரவு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது, அவன் தன் மனைவியிடம் நீயும் உனது தோலை உரித்துக் கொள்ளுமாறு சொன்னான். ஆனால் அவனது மனைவியோ அதை மறுத்துவிட்டாள்…
Loading...
குறும்படம்
இப்போது நீங்கள் படித்து வந்த கதை ஒரு குறும்படத்தின் கதையாகும். இந்த குறும்படத்தின் பெயர் “He Took His Skin Off For Me”!
Loading...