Loading...
பிரபல இந்தி நடிகை அலியாபட் மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் இந்தி நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டார். அவர் தனது சொகுசு காரில் விருந்து நடந்த இடத்துக்கு வந்தார். ஷாருக்கானை பத்திரிகை போட்டோகிராபர்கள் பலர் படம் பிடிக்க போட்டிபோட்டனர்.
Loading...
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு போட்டோகிராபர் கால் மீது ஷாருக்கானின் கார் டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் வலியால் துடித்தார்.
ஷாருக்கான் உடனடியாக காரை விட்டு இறங்கி காயம் அடைந்த பத்திரிகை போட்டோகிராபரை தனது காரில் ஏற்றினார். அவரை தனது பாதுகாவலர்களுடன் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
Loading...