Loading...
வித்தியாசமான கதை என்றால் தான் இப்போது நடிகர், நடிகைகள் கேட்கிறார்கள். அப்படி வளர்ந்து வரும் இயக்குனர் மிகவும் மாறுபட்ட கதையை கொண்டு பிரபலங்களிடம் கூறி பின் படத்திலும் கமிட்டாகின்றனர். அப்படி அந்த படம் வெளியாவதற்கு முன் ஒரு சிலர் அது என்னுடைய கதை, திருடி விட்டார்கள் என புகார் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.
அண்மையில் நயன்தாரா நடித்திருக்கும் டோரா படம் என்னுடைய அலிபாபாவும் அற்புத காரும் கதை என ஸ்ரீதர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி கதையையும், ஸ்ரீதர் கதையையும் வாங்கி ஆலோசனை செய்துள்ளனர்.
Loading...
இதில் தாஸ் ராமசாமியின் கதை அவருடைய கதை தான் என்று உறுதிபடுத்தியுள்ளனர் எழுத்தாளர் சங்கம்
Loading...