ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரகசிய பேச்சுவார்த்தையானது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நடப்பதாக வதந்திகள் பரவியுள்ளன.
இந்த இரகசிய பேச்சுவார்த்தையில் தற்போது அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் இணைந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த லக்ஷ்மன் யாப்பா தெற்கு அதிவேக வீதி ஊடாக கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.
இதனிடையே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.