தேவைப்படும் பொருட்கள் :
மைதா மாவு – 1 கப்
சர்க்கரை – 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – 1 1/4 கப்
பட்டர் – 3 தேக்கரண்டி
முட்டை – 1
ஸ்ட்ராபெர்ரி – 10
செய்முறை :
* பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும்.
* முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.
* 5 ஸ்ட்ராபெர்ரியை பொடியாகவும், 5 ஸ்ட்ராபெர்ரியை மெல்லிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை போட்டு சேர்த்து கிளறவும்
* அடுத்து அதில் பால், பட்டர், முட்டை, பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிதளவு பட்டர் விட்டு ஒரு கரண்டி மாவை கலவையை தடியாக ஊற்றவும்.
* பின் அந்த மாவின் மேல் மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை அடுக்கி இந்தக் கலவை நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு இறக்கிவிடவும்.
* சூப்பரான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் ரெடி!