Loading...
ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை நிராகரித்ததாக கூறும் போதிலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்று நாட்டின் ஆட்சி யார் கைகளில் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின் உண்மையான நிலவரத்தை சர்வதேச தரப்பிடம் எடுத்துக்கூற பொருத்தமான ஒருவர் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Loading...