முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தங்களுடை காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடன் கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் கேப்பாப்புலவு மக்களுக்கு படையினர் தொடர்ந்தும் இடையூறு விளைவித்து வருவதுடன், அம் மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிமன்ற கட்டளையினை ஏற்று கேப்பாப்பிலவு மக்கள் அடக்கமான வகையில் தமது போராட்டத்தினை இன்றும் (17) தொடர்ந்திருந்த நிலையில் இராணுவத்தினருடைய இச் செயற்பாடானது மக்களை சினமடைய வைத்துள்ளது.
அத்துடன் இராணுவத்தின் இவ்வாறான அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்வதற்கும் கேப்பாப்பிலவு மக்கள் முடிவு செய்துள்ளனர்.