தகவல் அறியும் சட்டம் மற்றும் கணக்காய்வு சட்டம் என்பன நாட்டின் அரச சேவை மற்றும் அரச நிதி முகாமைத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 34 வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நாட்டின் அரசியல் துறையில் மாத்திரமல்லாது அரச சேவை உட்பட சகல துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்த புதிய சட்டங்களையும் சடடமூலங்களையும் நிறைவேற்றி அமுல்படுத்தியுள்ளது.
அரச சேவையில் மாத்திரமல்ல, சகல துறைகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றமானது பொதுமக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் சமூகம் ஒன்றின் நல்லிருப்புக்கு மிகவும் அத்தியவசியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.