நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அதி சொகுசு நிஸான் பெட்ரோல் வீ8 ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நிதியமைச்சர் ஹொங்கொங் விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நிதி அமைச்சில், அமைச்சருக்கு நெருக்கமான ஊழியர்கள் சிலர் அந்த ஜீப் வண்டியில் மதுபானம் அருந்த சென்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான மோட்டார் வாகனங்கள் மூன்று மாத்திரமே இலங்கையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருப்பது KY – 8306 என்ற இலக்கத்திலான மோட்டார் வாகனமாகும்.
எப்படியிருப்பினும் குறித்த மோட்டார் வாகனம் இதற்கு முன்னரும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்த அமைச்சின் தகவல் வட்டாரங்கள் ஊடாக தெரியவந்துள்ளன.
நிதி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நிதி அமைச்சரின் வேலைகளை பார்ப்பதற்கு, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவை நியமிக்காமையினால், அமைச்சின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.