கடந்த சில நாட்களாக விஜய்ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விளையாடி வருகிறார்.
இந்த போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி டெல்லியில் நடைபெறவிருந்தது.
இந்த போட்டியில் தோனியின் ஜார்கண்ட் அணி, பெங்கால் அணியுடன் இன்று மோதவிருந்தது.இந்த போட்டியில் கலந்து கொள்ள தோனி உள்பட ஜார்கண்ட் அணியினர் நேற்றே டெல்லி வந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் சற்று முன்னர் ஜார்கண்ட் அணியினர் தங்கியிருந்த ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தோனி உள்பட ஜார்கண்ட் அணியினர் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றபட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்பட்டுத்தினர்.
இந்த தீ விபத்து காரணமாக இன்று நடைபெறவிருந்த போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.