ஜெயம் ரவி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நாயகர்கள் தங்கள் திறமையை காட்ட என்ன வேண்டும் என்பது குறித்து கூறிய ஜெயம்ரவி,
“சில இயக்குனர்கள் நன்றாக கதை சொல்லுவார்கள். ஆனால் சொன்னதுபோல அவர்களால் படம் எடுக்க முடியாது. அதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக படக்குழு நன்றாக அமைய வேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் சரியாக அமையவில்லை என்றால், அந்த படம் சரியாக வராது. அந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும்.
எனவே, நான் கதையை கேட்டு ஒப்புக் கொண்டாலும், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கவனிப்பேன். அதில் எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன். இல்லையென்றால் தவிர்த்து விடுவேன். ஏனென்றால் ஒரு ஹீரோவாக நான் திறமையை காட்ட வேண்டும் என்றால், நல்ல கதையுடன் நன்றாக பணியுரியும் படக்குழுவும் வேண்டும். தொழில் நுட்ப குழு அவரவர் வேலையை சரியாக செய்தால் தான் ஹீரோவின் திறமை, உழைப்பு வெளிப்படும். இல்லையென்றால் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எல்லாமே வீணாகிவிடும்” என்றார்.