Loading...
தீர்வு கோரி கொழும்பு கோட்டையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் முதலானவற்றுக்கு தீர்வு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Loading...
சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏனைய தோழமை அமைப்புகளுடன் இணைந்து இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில், கிளிநொச்சியியைச் சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Loading...