மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பா.ஜ.க சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கோவா முதலமைச்சராக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் பதவியேற்றுள்ளார். மணிப்பூரில் பாரதீய ஜனதா முதலமைச்சராக பிரேன்சிங் பதவி ஏற்றார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி பாரதீய ஜனதா தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
உத்தரபிரதேச முதலமைச்சர் பதவிக்கு சக்தி வாய்ந்த வரை தேர்வு செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதன்படி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.