கடனாவில் போலி கடன் அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் Ajax பகுதியில் உள்ள 25 வயதான நிரூபா ஜெகதீஸ்வரன் என்ற பெண்ணை டொரண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டொராண்டோ இடைத்தங்கல் ஆணையத்தில் டோக்கன்களைப் ( TTC tokens) பெற்றுக்கொள்வதற்காக, போலி கடன் அட்டைகளை குறித்த பெண் பயன்படுத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து 42 போலி கடன் அட்டைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
TTC நிலையங்களில் டோக்கன்களைப் கொள்வனவு செய்து, அவற்றுக்கான பணத்தை போலி அட்டைகள் மூலம் செலுத்தியுள்ளார். மற்றையவர்களின் வங்கித் தகவல்களை திருடி, அவற்றின் மூலம் போலி கடன் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் டொரண்டோ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.