பலவகையான கனவுகளுடன் தமது பிள்ளைகளை சிறு வயதில் இருந்து வளர்த்து வரும் தாய்க்குலம், அந்த பிள்ளைக்கு எதாவது நடக்கும் பட்சத்தில் தமது உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தற்போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை தனிமையில் இருந்தவாறு பாதுகாத்து வரும் தாய் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
பொலன்நறுவை மன்னம்பிட்டிய பகுதியில் உள்ள 85 வயது தாயார் ஒருவரின் நிலை தொடர்பிலேயே தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டில் நோயினால் பீடிக்கப்பட்ட தனது மகனை பல வருடங்கள் கடந்து இன்றும் தள்ளாடும் வயதில் பாதுகாத்து வருகின்றார்.
கிழக்கு மன்னம்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 44 வயதான குறித்த நோயாளியான மகனை பாதுகாத்து வருவதுடன், அருகில் உள்ள சிலர் இவர்களுக்கு உணவினை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம் மாவட்டம் ஜனாதிபதி மைத்திரியின் மாவட்டம் என்பது குறிப்பிடத் தக்கது.