சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், விசாரணை ஆணைக்குழுக்களாலும், ஐ.நா அறிக்கைகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்த வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
குறித்த அமைப்பினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய பிரேஸில் நாட்டின் இலங்கைக்கான தூதுவராக பணியாற்றும் முன்னாள் ராணுவத் தளபதியும் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ‘யோசப் முகாம்’ என அழைக்கப்பட்ட சித்திரவதை முகாமிற்குப் பொறுப்பாகவிருந்த ஜகத் ஜயசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் 4ஆம் மாடி என அழைக்கப்படும் சித்திரவதைக்குப் பெயர்பெற்ற பிரிவிற்கு இயக்குனராகவிருந்த, தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகவிருக்கும் சிசிர மென்டிஸ் ஆகியோரை இடைநிறுத்துமாறும் குறித்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பானது தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்ட, இடைநிலை நீதி நிபுணர் ஜஸ்மின் சூக்காவின் வழிகாட்டலின் கீழ் மனித உரிமைகளுக்கான அமைப்பினால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.