‘வந்தா மல’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது வி.இசட் துரை இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கும் மேலும் 2 படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.
பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் பிரபலமாக உள்ளது. அந்த நிறுவன நிர்வாகிகள் சமீபத்தில் இசையமைப்பாளர் சாம் டி ராஜை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர். அப்போது அந்த அமெரிக்க நிறுவனத்துடன் சாம் டி.ராஜும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலமான இந்த நிறுவனம் ஏற்கனவே ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் எண்டர்டைன்மென்ட்’ மற்றும் ‘ரிலையன்ஸ் ஜியோ’வுடன் இணைந்து செயல்பட உள்ளது.