கொழும்பு பாணந்துறை பகுதியில் உள்ள மஞ்சள் கோட்டு வழியாக வீதியை கடக்கும் போது தனியார் பேருந்தில் மோதுண்டு படுகாயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை பிரதமர் பெண்கள் பாடசாலைக்கு அருகில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த பெண் மோதுண்டுள்ளார்.
அப்போது அருகில் அவரது பிள்ளை இருந்துள்ளது. வேகமாக பேருந்து வருவதை அவதானித்த பெண், தனது பிள்ளையை நடை பாதை பக்கம் தள்ளி விட்டுள்ளார். இதனால் குழந்தை தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை துடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான ரந்திமா ஜீவந்தி என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.