விவாகரத்து பெற்ற பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ இதை தொடர்ந்து ‘திருட்டுபயலே-2’ மற்றும் மலையாள படங்களில் ‘பிசி’யாக நடித்து வருகிறார்.
அடுத்து மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். சித்திக் இயக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இத்துடன் மற்றொரு புதிய படத்திலும் அமலாபால் நடிக்கிறார். இது நகர பின்னணியில் நடக்கும் அட்வேஞ்சர் கதை. நாயகியை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. நயன்தாராவுக்காக உருவாக்கப்பட்ட இந்த கதையில் அவர் நடிக்க மறுத்து விட்டார். இப்போது அந்த வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.