இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளைபோல் நிறைவேற்றாமல் விட இயலாது.
அவ்வாறு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போனால் மஹிந்த அரசாங்கம் பெற்ற கசப்பான அனுபவத்தினை இந்த அரசாங்கமும் பெறும்.
அவ்வாறான நிலைக்கு செல்லாமல் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.வந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவா அமர்வு நிலைமைகள் குறித்தும், இலங்கைக்கு 2வருட கால அவகாசம் வழங்கப்படுவது குறித்தும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இங்கே இணை அனுசரணை என்பது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களை நிறைவேற்றுகின்றோம் என்பதற்கான வாக்குறுதியாகவே அது அமையும்.
இந்நிலையில் இந்த ஆண்டு (2017) நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்கான வரைபு இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிலும் 2015ம் ஆண்டு தீர்மானத்தில் உள்ள விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதுடன், இந்த தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றவுள்ளது.
எனவே 2 தடவைகள் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியிருக்கின்றது. அந்த வகையில் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றாமல் விட இயலாது.
இதற்கிடையில் உள்நாட்டில் ஜனாதிபதியும், பிரதமரும் கூட்டங்களில் பேசும் உரைகள் தொடர்பாக எமது மக்கள் நியாயமான சினமடைகின்றார்கள்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கோபமடைகின்றார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் 47 நாடுகளுக்கு முன்னால் உத்தியோகபூர்வமாக வாக்குறுதியை வழங்கியிருக்கின்றது.
இதனை தேர்தல் வாக்குறுதிகளைப் போல் அரசாங்கம் நிறைவேற்றாமல் விட இயாலுது. அவ்வாறு விட்டால் மஹிந்த அரசாங்கம் பெற்ற கசப்பான அனுபவத்தைபோல் இந்த அரசாங்கமும் பெறும்.
அதாவது இந்த அரசாங்கமும் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றது.
2015ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது வெளிவிவகார அமைச்சர் எந்தவொரு கருத்தையுமே கூறவில்லை. அப்போது எனக்கும் இலமைச்சருக்குமிடையில் தர்க்கம் உங்கை நீதி அருவானது.
அப்போது நான் கூறிய கருத்துக்கள் சர்வதேச நிபுணர்களால் ஏற்கப்பட்டதுடன், தீர்மானத்திலும் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான விடயம் சேர்க்கப்பட்டது.
மேலும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளதாகவும் அதற்கு பல உதாரணங்கள் உள்ளதாகவும் அப்போது பேசினார்கள்.
ஆனால் அவர்களே இப்போது சட்டத்தில் இடமில்லை என கூறுகின்றார்கள். ஆனால் வெளிநாட் டு நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது.
அதில் குறிப்பாக பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டபோது ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.
அதில் பிரதம நீதியரசர்கள் பதவி நீக்கம் தொடர்பான விசாரணைகளை பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் செய்யவேண்டும் என கூறியுள்ளார். ஆகவே சட்டத்தில் இடம் உள்ளது.
அதனை விட சர்வதேச உடன்படிக்கை ஒன்றை கைச்சா த்திட்ட பின்னர் சட்டத்தில் இடமில்லை என சாட்டுபோக்குகள் சொல்ல இயலாது. சட்டத் தை திருத்தியாவது செய்ய வேண்டும்.
அதேபோல் நீதி பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்னர் சர்வதேச குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டிய பல விடயங்களை இலங்கையில் குற்றங்களாக அறிவிக்க வேண்டும்.
இப்போது ஒரு விடயம் மட்டுமே குற்றமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.அதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை குற்றம் என்பது அதற்கான சட்டம் வரைபில் உள்ளது.
எனவே பல விடயங்கள் குற்றங்களாக அறிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும்போது அதனை நடை முறைப்படுத்தும் விடயத்தில் கூட்டமைப்பு செம்மையாக செயற்படும் என்றார்.