இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ 75 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் 75-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
“கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தை நான் தயாரிக்கிறேன்” என்றார். கார்த்திக் நரேன் பேசும்போது…
“என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத்தர குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். ‘ஜில் ஜங் ஜக்’ சூரஜ் வைத்தியிடம் சில மாதங்கள் உதவி இயக்குனராக வேலை செய்தேன். பிறகு, இந்த கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடினேன். இருபத்தியொரு வயது பையனான என்னை நம்பி சில கோடிகளை கொடுக்க யாரும் தயாராக இல்லை.
என்னை யாரும் நம்பவில்லை என்று அப்பாவிடம் போய் சொன்னேன். நான் உன்னை நம்புகிறேன் என்று சொல்லி, இந்த படத்தை தயாரித்தார். சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கூகுள் பார்த்துதான் கற்றுக் கொண்டேன்.
ரகுமான் என்னை நம்பி நடிக்க சம்மதித்தார். இப்போது, பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். சின்ன பையன், புது டீம் என நினைக்காமல் மணிரத்னம், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான் என பலர் சப்போர்ட் செய்தாங்க”என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் ரகுமான் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.