நம்மில் பலரும் மாரடைப்பு, நெஞ்சுவலி இரண்டுமே ஒன்று தான் இதுவரையிலும் நினைத்திருப்போம். ஆனால் அது தவறான ஒன்று, உண்மையில் நெஞ்சுவலி- மாரடைப்பு என்பது வேறு வேறு பிரச்சனைகள் தான்.
ஏனெனில் மாரடைப்பு நமது இருதயத்துடன் தொடர்பாக ஏற்படுகின்ற ஒருவகை பிரச்சனையாகும். ஆனால் நெஞ்சுவலி வருவதற்கு பல்வேறு உடல் ரீதியான காரணங்கள் உள்ளது.
மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்படுவதற்கு என்ன காரணம்?
நமது இதயத்தில் இருக்கும் நான்கு அறைகளுக்கு தொடர்ந்து ரத்தோட்டம் நடைபெற்று கொண்டிருக்கும். ஆனால் இதனை இயக்கும் இதய தசை நார்களுக்கு ரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.
இதய தசை நார்களுக்கு, இரண்டு வகை சிறிய ரத்தக் குழாய்களான கொரனரி நாடிகள் மூலமே ரத்தம் கிடைக்கின்றது.
அப்படி இருக்கும் போது, இந்த குழாய்களில் ஏதேனும் ஒன்றில் அதனுடைய கிளைகளில் ரத்தம் செல்வது தடைப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு ரத்தம் போதிய அளவு கிடைக்காமல் இருக்கும்.
எனவே அந்நிலையில் தான் இதயத்தின் தசை நார்களுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல், அதன் செயல்கள் அனைத்தும் தடைபடும் போது, நமக்கு நெஞ்சுப் பகுதியில் வலிகள் ஏற்படுகிறது.
நமது இதய தசை நார்களுக்கு ரத்தம் செல்வது முற்றிலும் தடைபடும் போது, அப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடக் கூடும். எனவே நமது உடம்பின் இதயத் தசை இறப்பு ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.