யாழில் மாணவியை பாழடைந்த கட்டடத்துக்குள் வைத்து துஸ்பிரயோம் செய்த காவாலிக்கு நடந்த கதி பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் இவருக்கு உதவிய வாகனச் சாரதி மற்றும் நண்பர் ஆகியோரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
குறித்த நபர் கடந்த மாதம் 16 ஆம் திகதி தனியார் கல்வி நிலையத்திற்கு சக மாணவியுடன் சென்ற பதின்ம வயது மாணவியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்று மீசாலைப் பகுதியில் ஆட்களில்லாத வீடொன்றில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
குறித்த மாணவியின் பெற்றோருக்கு சக மாணவி தகவல் தெரிவித்ததையடுத்து பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். சக மாணவியின் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார் உடன் நடவடிக்கையை மேற்கொண்டதன் பயனாக மூன்று மணி நேரத்தில் கடத்தப்பட்ட மாணவியை மீட்டதுடன் கடத்திச் சென்ற இளைஞரையும் கைது செய்தனர்.
குறித்த இளைஞன் வழங்கிய தகவலையடுத்து வாகனச் சாரதியையும் நண்பரையும் கைது செய்த பொலிஸார் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கினை விசாரித்த நீதிவான் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மாணவியைக் கடத்தி வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞரை தொடர்ந்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வாகனச் சாரதி மற்றும் அவரது நண்பர் ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.