இந்தியா-ஆஸ்திரோலியா இடையே ராஞ்சியில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான க்ளென் மேக்ஸ்வெல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை கேலி செய்துள்ளார்.
3-ஆம் நாள் ஆட்டத்தின் போது புஜாரா அடித்து, பவுண்டரி லைன் பக்கம் சென்ற பந்தை தடுத்த மேக்ஸ்வெல் தனது வலது தோள்பட்டையை பிடித்தபடி சிரித்துக் கொண்டே கிண்டல் செய்தார்.
முன்னதாக, டாஸ் வென்று முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல்நாள் ஆட்டத்தின் 40வது ஓவரில் பவுண்டரி லைன் நோக்கி சென்ற பந்தை தடுத்த கேப்டன் கோலியின் வலது தோள்பட்டை தரையில் தாக்கியதில், பலத்த காயமடைந்தார். இதையடுத்து பீல்டிங் செய்யாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து, 2வது நாள் ஆட்டத்தின் போதும் கோலி பீல்டிங் செய்ய வரவில்லை. மாறாக இந்திய அணியின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய கோலி 6 ரன்களை எடுத்திருந்த போது கம்மின்ஸ் வீசிய பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஆஸ்ரேலிய அணி நிர்ணயித்த 451 ரன்களை விரட்டி செல்லும் இந்திய அணி, 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 360 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் புஜாரா அதிகபட்சமாக 130(328) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.