Loading...
நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்பதங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Loading...
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால், அது நமது உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கிறது.
- காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அது செல் உறிஞ்சிகளின் அளவை குறைத்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இது ப்ரீ-ராடிக்கல் எனும் புற்றுநோய் செல்களின் பாதிப்பில் இருந்து, தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- நெல்லிக்காயில் விட்டமின் C அதிகம் உள்ளது. எனவே இது உடலை குளிர்ச்சியுடன் வைத்து, உடலின் அதிகப்படியான சூட்டை குறைக்கிறது.
- தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், அது நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுத்து, கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்கிறது.
- தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், அது கண்புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், அது இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், அது இதய தசைகளை வலிமையாக்கி, அதிகளவிலான ரத்தத்தை உடல் முழுவதும் சீராக செலுத்தி, பல்வேறு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
- நெல்லிக்காய் தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் தன்மைக் கொண்டது. எனவே நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் அதனுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
- நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், அது வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, பற்களை வலிமையடையச் செய்வதுடன், வாயில் ஏற்படும் புண்களைக் குணமாக்குகிறது.
- பைல்ஸ் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- நெல்லிக்காய் சாற்றில், சிறிது தேன் கலந்து இரண்டு வேளைகள் தினமும் சாப்பிட்டு வந்தால், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் C சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை அளித்து, சரும அழகை அதிகரிக்கச் செய்கிறது.
Loading...