டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்காவில் வன்முறை என செய்திகள் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி டொனால்டு டிரம்பிடம் தோல்வியடைந்தார்.
தோல்விக்கு பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்காவில் நடக்கும் வன்முறைகளை பார்த்தால் கஷ்டமாக உள்ளது.
நான் காயங்களிலிருந்து வெளியே வந்து பொதுவெளியில் அமெரிக்க மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
அமெரிக்க நிலவரம் குறித்து ஹிலாரி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது