அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரகசிய தகவல்கள் அடங்கிய கணனி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிவ்யோர்க் நகரத்தில் வைத்து குறித்த கணனி இவ்வாறு காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரகசிய புலனாய்வு பிரிவு பிரதிநிதியின் மோட்டார் வாகனத்தினுள் இருந்த நிலையில் குறித்த மடிக்கணனி சிலரினால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த கணனியை திருடிய நபர்களை கைது செய்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு பிரிவு விரிவான விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு சொந்தமான ட்ரம்ப் டவர் கட்டடத்தின் முக்கிய திட்டங்கள், ஹிலரி கிளின்டனின் மின்னஞ்சல் தொடர்பிலான பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் இராஜதந்திர தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.