Loading...
சீனாவுக்கு வழங்கப்படவிருந்த அம்பாந்தோட்டையின் குத்தகையை 80வீதத்திலிருந்து 60வீதமாக குறைக்கப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீதமான பங்கை சீனாவுக்கு 99ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தொடர்ந்தும் தனது எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.
Loading...
இந்நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை 60 வீதமாக குறைக்கும் வகையில் புதிய உடன்பாட்டு வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய உடன்பாடு தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Loading...