மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா- நடிகர் சோபன் பாபு தம்பதிக்கு பிறந்த குழந்தை என ஈரோடு மாவட்டத் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கான ஆவணம் தன்னிடம் உள்ளதாக கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், குறித்த ஆவண பத்திரம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
1986ம் ஆண்டு எழுதப்பட்டுள்ள அந்த பத்திரத்தில், ஜெயலலிதா-சோபன் பாபு கடந்த 1982ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டதாகவும், இருவருக்கும் 1985ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று வீட்டிலேயே பிறந்ததாகவும்.
எம்ஜிஆர் தன் மீது வைத்திருந்த பாசத்தால் சோபன் பாபுவுக்கு பிடிக்கவில்லை, ஆதனால், இருவரும் பிரிந்தோம் எனவும், பின்னர். குழந்தையை ஈரோட்டில் உள்ள எனது தோழி வசந்தா மணியிடம் தத்துக் கொடுத்ததாக குறித்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில். சோபன் பாபு ஆங்கிலத்திலும், ஜெயலலிதா தமிழிலும் கையெழுத்து பொட்டுள்ளனர். குழந்தைதையை பெற்ற வசந்தா மணியும் கையெழுத்திட்டுள்ளார். குறித்த ஆவண பத்திரம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.