Loading...
மும்பையில் சியோன் பகுதியில் வசித்து வரும் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மதிய வேளையில தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக ஹோலி பண்டிகை கொண்டாடியதைப் போன்று உடல் முழுக்க கலர் பொடிகளை பூசி கொண்டு மர்ம மனிதன் ஒருவன் வந்திருக்கிறான்.
அந்த பெண் சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில், அந்த மர்ம மனிதன் திடீரென அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டிருக்கிறான்.
Loading...
மர்ம மனிதனின் பிடியிலிருந்து தப்பிக்க அந்த பெண் முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் அந்த பெண்ணை முத்தமிட்ட மர்ம மனிதன் உதட்டை கடித்து துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கிறான்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
Loading...