லண்டனில் இனத்துவேசத்திற்கு எதிரான பேரணியொன்று ஆகுதிகளின் உரிமைகளுக்கான அமைப்பினதும், தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினதும் இணை ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பேரணி நேற்று பறை இசையுடன் ஆகுதிகளுக்கான அடிப்படை உரிமைகளையும், இனத்துவேசத்துக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியவாறு 30 பேரைக் கொண்ட தமிழர்கள் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் இந்த பேரணியின் போது இலங்கை சிங்க கொடியையும், விமல் வீரவங்சவின் படத்தையும் தாங்கி வந்த மற்றுமொரு குழுவினருக்கும், இனத்துவேசத்திற்கு எதிரான போராட்டத்தினை மேற்கொண்ட குழுவினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, இரு குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிலவரம் அறிந்து போலிசார் வரவழைக்கப்பட்டு இருதரப்பும் வேறுவேறு திசைகளில் நின்று பங்குகொள்ளலாம் என கூறப்பட்டதுடன் நிலைமை சீராக்கப்பட்டது.
மேலும் தொழிற்சங்களால் ஒருங்கிணைக்கபட்ட இந்த பேரணியில் தமிழர்கள் பங்குபற்ற எந்த தடையும் இல்லை என்று போலிசார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.