கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று பதினைந்தாவது நாள் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரன் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று சந்தித்தனர்.
இதன்போது காணிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது என உறுதிமொழி வழங்கப்பட்டதனையடுத்து பதினைந்து நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் தங்களின் போராட்டத்தை நிறுத்தினர்.
காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி மக்கள் கடந்த 4ஆம் திகதி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னங்கண்டி மக்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

Loading...
Loading...
Loading...