சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் பூமி. குன்றுகள் சூழ்ந்த மேட்டு நிலத்தில் உள்ள சிவன் கோயிலால் காஞ்சன கிரி புகழ் பெற்றது.
ராணிப்பேட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது காஞ்சனகிரி. இங்கே சுயம்புவாக உருவான பல லிங்கங்களைக் காண முடியும்.
இந்நிலையில், இன்றளவிலும், இந்த மலையில் அமானுஷ்யங்கள் பல நிகழ்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேலும், இந்த மலையில், ஒரு வித்தியாசமான பாறை உள்ளது. அந்த பாரையில் இருந்து ஒரு விநோதமான மணியோசை வருகிறது.
இது மட்டுமல்லாது, இரவு நேரங்களில் குறிப்பிட்ட மூலையில், ஒரு ஒளிக்காட்சி தெரிவதாகவும், ஒரு அரக்கனின் ரத்தம் தான் பச்சை நிற ரத்தங்களாக மாறியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
உண்மையிலேயே காஞ்சனகிரி மலை சாமானியர்களால் புரிஞ்சிக்க முடியாத பல அமானுஷ்யங்கள் நிறைந்ததுதானாம்.