கூட்டு எதிர்க் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு கூட்டங்கள் அரசாங்கத்துக்கு பாரிய ஒரு தலையிடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைதெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள இந்த எதிர்ப்பு கூட்டத் தொடர் நாடுமுழுவதும் பரவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒன்றுதிரண்டு வருகின்றனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் அதிருப்தியடைந்துள்ள மக்கள், அரசாங்கத்தை விட்டும் தூரமாக ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் மக்களுக்காக செய்த எந்தவொரு நலவும் இல்லை.
இந்தக் கூட்டங்களின் மூலம், அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் ஒன்றை புகட்டவுள்ளோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.