ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவாக முன்னோக்கி நகர்கின்றது என ஜாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் யார் என்ன சொன்னாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி வலுவாக முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இளைஞர் அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தனிப்பட்ட நபர்களை முதன்மை படுத்தும் கொள்கைகளிலிருந்து விடுபட்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரக் கட்சியினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் அகடமியில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் மட்டுமன்றி, ஐக்கிய சேதியக் கட்சி கட்சி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய கட்சியின் உறுப்பினர்களும் அரசியல் கற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் அகடமி ஊடாக அனைவரும் நலன் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் யுவதிகளுக்கு முறையாக அரசியலை கற்றுக் கொடுக்கும் நோக்கில் அரசியல் அகடமி ஒன்று ஜனாதிபதியினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.