நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும்.
விரோதங்கள் விலக விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். சிரித் துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
கல்யாணக் கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
உத்யோக வாய்ப்பு கிட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட் டும். சொத்துக்கள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு.
கொடுத்த கடன் வசூலாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சி களில் புதியவர்களின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும்.
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். உடன் பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் களில் ஆதாயம் கிடைக்கும். பெண் வழி பிரச்சினைகள் அகலும்.
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். பக்கபலமாக இருப்பவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
எதிர்பாராத வரவு வந்து சேரும் நாள். சவால்களைச் சாமர்த்திய மாகச் சமாளிப்பீர்கள். குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசைதிருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்ப தன் மூலம் நன்மை உண்டு.
குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். செவிகுளிரும் செய்திகள் காலை நேரத்தில் வந்து சேரும்.
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொகை வரவு திருப்தி தரும். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வீடு கட்டும் பணி கைகூடும்.