Loading...
குன்றத்தூர் சென்னை தொழில்நுட்ப கல்லூரி சார்பில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கும்பங்களுக்கு நிதி வழங்க கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீராம் ஏற்பாடு செய்தார். இதற்காக சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் தக்ஷசீலா கலை விழா மூலம் நிதி திரட்டப்பட்டது.
Loading...
கலை விழாவில் வசூலான ரூ.30 லட்சம் நிதியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் லாரன்ஸ் தற்கொலை செய்து கொண்ட 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கினார். தனது பங்காக ரூ. 1 லட்சம் நிதி உதவியையும் அவர் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் 4 வருடம் அனைத்து வசதிகளுடன் இலவசமாக கல்வி பயிலுவதற்கான அனுமதி கடிதத்தையும் அவர் வழங்கினார். கல்லூரி முதல்வர் சீனிவாசன், பேராசிரியர் மனோகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Loading...