ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் ஒரு சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிகின்றபோதும், சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை வீரகெட்டிய வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் பங்களிப்பு அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், சர்வதேச நீதிபதிகள் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாட்டை இவ்வாரம் ஜெனீவாவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருப்பின் அதற்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளதோடு, வெளிநாட்டு நீதிபதிகள் விடயத்தில் அரசியலமைப்பை திருத்தாமல் எதனையும் செய்யமுடியாதென திட்டவட்டமாக கூறியுள்ளார்.