கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று ‘கொலையுதிர்க்காலம்’. அஜித்தின் ‘பில்லா 2’ மற்றும் கமல்ஹாசனின் ‘உன்னை போல் ஒருவன்’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி வரும் இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார்
இந்நிலையில் இந்த படம் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் உருவாகவிருப்பதாகவும், தமிழில் நயன்தாரா நடித்து வரும் கேரக்டரில் தமன்னா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.
தற்போது இந்த படத்தின் வில்லனாக பிரபுதேவா நடிக்கவுள்ளராம்.தமிழில் வில்லன் கேரக்டருக்கு இதுவரை நடிகர் தேர்வு செய்யப்படவில்லை.
எனினும் தென்னிந்தியா முழுவதும் பிரபுதேவாவுக்கு மார்க்கெட் இருப்பதால் அவரே தமிழிலும் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய்-நயன்தாரா நடித்த ‘வில்லு’ படத்தை பிரபுதேவா இயக்கியபோது பிரபுதேவாவும் நயன்தாராவுக்கு இடையே காதல் ஏற்பட்டு பின்னர் அது திருமணம் வரை சென்றது.
ஆனால் திடீரென எதிர்பாராத நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் பாலிவுட்டில் பிரபுதேவாவும், கோலிவுட்டில் நயன்தாராவும் பிசியாகிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது ‘கொலையுதிர்க்காலம் படத்தில் நயன்தாராவும் பிரபுதேவாவும் இணைவது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.