இந்தியாவின் மிகப் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய ‘பாகுபலி 2’ படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது அந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
‘பாகுபலி 2’ டிரைலரை ஒரே நாளில் 50 மில்லியன் பேர் பார்த்துள்ளது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவினை மிக பிரமாண்டமாக நடத்தவும் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களை அழைக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல் பாகத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவானி, ‘பாகுபலி 2′ படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தில் சின்ன சின்ன பாடல்களுடன் சேர்த்து 8 பாடல்களை அவர் கம்போஸ் செய்திருந்த நிலையில் இந்த படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்நிலையில் பாகுபலி 2’ படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றிக்கும், டிரைலரை பாராட்டிய பிரபலங்களுக்கும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.