பிரபல நடிகை சமந்தாவும், பிரபல நடிகர் நாக சைதன்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும் தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக வெகுவேகமாக வதந்தி பரவி வருகிறது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிவிக்ரம் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். சமந்தா-நாகசைதன்யா படத்தை திரிவிக்ரம் இயக்கும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்றும் அவர் தற்போது ஜுனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு மற்றும் பவன்கல்யாண் படத்தை அடுத்தடுத்து இயக்கவுள்ளார்.
சமந்தா-நாகசைதன்யா படத்தை அவர் இயக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் வதந்தியே என்றும் தெரிவித்துள்ளனர்.