கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ‘இப்படை வெல்லும்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றில் ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் ‘இரும்புத்திரை’ என்ற படத்தை இயக்கி வரும் பி.எஸ்.மித்ரன், இந்த படத்தை முடித்தவுடன் அடுத்ததாக உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் உதயநிதியை சந்தித்து மித்ரன் ஒன்லைன் கதை ஒன்றை கூறியதாகவும், இந்த கதை உதயநிதிக்கு பிடித்துவிட்டதால் இந்த படத்தை உதயநிதியே தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உதயநிதி-மித்ரன் இணையும் படம் குறித்த அறிவிப்பு ‘இரும்புத்திரை’ படத்தின் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.