ஈரான் நாட்டை சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள Dayyer நகரத்தை சுனாமி தாக்கி மூழ்கடித்தது.
குறித்த வீடியோ பேரலைகள், கட்டிடங்களை தகர்த்துக்கொண்டு நகரத்திற்குள் செல்கிறது. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். தற்போது, Dayyer நகரம் மூழுவதும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.
நீரில் உயிரிழந்த 40 வயதுடைய நபரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுனாமியில் சிக்கி நான்கு சுற்றுலா பயணிகளும், நான்கு வயது சிறுவன் ஒருவனும் காணாமல் போயுள்ளனர். 17 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாத நிலையில் சுனாமி கடற்கரையை தாக்கியதில் மீன் பிடி படகுகள் பயங்கர சேதமடைந்துள்ளது.
தற்போது, மீட்புக்குழுவினரும், நீச்சல் வீரர்களும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுனாமி தாக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.