ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மாநில அரசுக்குதான் விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என பல்வேறு தரப்பினரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அப்போல்லோ மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக அரசின் விளக்க அறிக்கைகள் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக நீதி விசரணை நடத்த வேண்டும் என்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை களைய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுந்துவருகின்றன.