மொசாம்பிக் நாட்டின் மேற்கு மகாணமான டேடேவின் சம்பேஸி ஆற்றங்கரையோரம் வசித்து வந்தவர் எஸ்டேவாயோ அல்பர்டோ கினோ. 19 வயதே ஆன கினோ அந்நாட்டின் 2-ம் நிலை கால்பந்து கிளப் அணியான அட்லெடிகோ மினைரோ டி டேடே அணிக்காக விளையாடியவர்.
இவர் கடந்த வியாழக்கிழமை சக வீரர்களுடன் பயிற்சி செய்துள்ளார். பின்னர் அருகில் உள்ள ஆற்றில் கை கால்களை கழுவியுள்ளார். அப்போது சுமார் 16 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை அவரது கையை கடித்து உள்ளே இழுத்து கடித்துக் கொன்றுள்ளது. அப்போது அவர் அருகில் இருவர் நின்றுள்ளனர். அவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போனதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆற்றின் கரையோரம் அடிக்கடி முதலை தாக்குதல் நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய உள்ளூர் போலீஸ் செய்தி தொடர்பாளர், இதுவரை அந்த வீரரின் உடலை கண்டுபிடிக்க முடியவி்ல்லை என்று தெரிவிதுள்ளார்.