சுச்சி லீக்ஸ் என்றாலே ட்விட்டரில் தெறித்த அந்த பிரபல நடிகர்களின் அந்தரங்கள் காணொளிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்.
அடுத்த வரவிருக்கும் புயளிக்கு சுச்சி லீக்ஸ் என்று பெயர் வைக்கலாமா என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு ஒரு சூறாவளி போல தமிழ் திரையுலகை புரட்டிப் போட்டது சுச்சி லீக்ஸ்.
பின்னணி பாடகி சுச்சித்திரா தான் இதை எல்லாம் வெளியிட்டாரா? அல்லது நிஜமாகவே ஹேக்கிங்கா? என தலையும் தெரியாமல், காலும் தெரியாமல் முடிந்துவிட்டது சுச்சி லீக்ஸ்.
பாடகி என்ற முகம் மாறி சுச்சி லீக்ஸ் என்ற முகத்திரை கொண்டுள்ள சுச்சித்திராவுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது…
கண்ணம்மா எனும் ஓரங்கட்டப்படும் பெண்களின் வாழ்க்கையை மேலோங்க வைக்கும் பிராஜக்ட் மூலமாக தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் பின்னணி பாடகி சுச்சிதிரா.
இந்த பிராஜக்ட் மூலமாக தான் மற்றும் தனது நட்பு மற்றும் உறவு வட்டத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி தருவதாக உறுதி மொழி அளித்துள்ளார் பாடகி சுச்சித்திரா.
இந்த பிராஜக்ட் தனக்கு மிகவும் நெருங்கிய பிராஜக்டாக இருப்பதாகவும். இதற்கு காரணம் தனது வாழ்வில் இன்றளவும் பெண் குழந்தைகள் படிப்பிலிருந்து பல வகையில் ஓரங்கட்டப்படுவதை பார்த்து வருவதாக பாடகி சுச்சித்திரா கூறியுள்ளார்.
இன்றளவும் கூட வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்கள் பல படிப்பில் ஆண், பெண் பேதம் காண்பிப்பதை பார்க்க இயல்கிறது. இந்த பேதம் மாற வேண்டும். இதே கருத்தை தான் பாடகி சுச்சித்திராவும் முன் வைத்து பேசியுள்ளார்.
தனது வீட்டில் சமையல் வேலை செய்யும் அமுதா என்பவரை முன் உதாரணமாக வைத்து பேசிய சுச்சித்திரா. அமுதா தானாக ஆங்கிலம் பயின்றவர். போனில் கூட ஆங்கிலத்தில் தான் தன்னுடன் பேசுவார். நன்கு மேலாண்மையும் அறிந்தவர் அமுதா என கூறியுள்ளார்.
அமுதா மட்டும் மேலும் நன்கு படித்திருந்தார் என்றால் அவர் நாடாளும் திறன் கொண்டிருப்பார். அதற்கான சாத்தியம் அவரிடம் இருக்கிறது.
இது போன்று சிறுவயதில் படிப்பை இழந்த பெண்கள் பெரியாளாக வந்திருப்பார்கள் என்பதை பேசி நேரத்தை வீணடிப்பதை காட்டிலும், கண்ணம்மா பிராஜக்ட் மூலமாக அவர்களை பெரியாள் ஆக்குவது சிறந்தது என பாடகி சுச்சித்திரா கூறியுள்ளார்.