இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ஸ்மார்ட் போன், ஐபோன் ஆகியவை நம்முடைய வாழ்வில் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது.
ஸ்மார்ட் போன் அல்லது ஐபோன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் இதே ஸ்மார்ட் போன் அல்லது ஐபோன் நமது உயிரை பறிக்கும் அபாயமும் உள்ளது.
ஐபோன்களை உபயோகிக்கும்போது நாம் செய்யும் சில சிறிய தவறால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில் லண்டனில் குளிக்கச் சென்ற இடத்தில் ஐபோனை சார்ஜ் செய்தவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் புல் என்பவர் தனது ஐபோனை பாத்ரூமில் சார்ஜில் போட்டுவிட்டு குளித்துள்ளார்.
அப்போது மொபைல் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டது. சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் போது ஈரக்கையினால் அந்த ஐபோனை அவர் தொட்ட போது மின்சார ஷாக் அடித்து மயங்கி விழுந்தார்.
பாத்ரூமில் விழுந்ததால் அவரது நிலையை யாரும் அறிய முடியாததால் பரிதாபமாக அவர் ஒருசில மணித்துளிகளில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
இருப்பினும் இந்த மரணத்திற்கு பின்னால் வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.